நெல்லை, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இளம்பெண்ணுடன் பழக்கம் நெல்லை டவுன் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மைதீன் கான். இவருடைய மகன் செய்யது பீர் முகமது (30 வயது). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தற்போது டவுன் பாரதியார் தெருவில் வசித்து வருகிறார். இவர் 35 வயது இளம்பெண் ஒருவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். பாலியல் தொல்லை இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண்ணின் 4 வயது மகளை தனியார் பள்ளியில் இருந்து செய்யது பீர் முகமது தனது பைக்கில் அழைத்து வந்துள்ளார். அப்போது அந்த சிறுமி சேட்டை செய்தாள். இதனால் ஆத்திரமடைந்த செய்யது பீர் முகமது சிறுமியை கடித்து துன்புறுத்தினார். மேலும் பாலியல் தொல்லையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. போக்சோவில் கைது இதுகுறித்து சிறுமி அழுது கொண்டே தனது தாயிடம் தெரிவித்தாள். உடனடியாக அந்த பெண் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செய்யது பீர் முகமதுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/4-vayathu-sirumikku-paliyial-thollai-thayudan-pazhagiya-valibar-pocso-vil-kaithu



