ஹராரே, வங்காளதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது. அடுத்து நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது. இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 48.1 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.பொறுப்புடன் ஆடிய வெஸ்லி மாதேவீர் அரை சதமடித்து 75 ரன்னில் வெளியேறினார். வங்காளதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தன்வீர் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசஅணி களமிறங்கியது.தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய வங்காளதேச அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.இதனால் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை ஜிம்பாப்வே 2-0 என வென்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/3rd-odi-bangladesh-defeats-zimbabwe




