சென்னை, பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. பெண்கள் ஆசிய கோப்பை துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன. அபார வெற்றி இத்தொடரில் நேற்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, வங்காளதேசத்தின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதி இதையடுத்து முதல் அரையிறுதியில் வங்காளதேச அணி நாளை இந்தியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-cricket-bangladesh-advances-to-the-semi-finals-do-you-know-who-they-will-face




