புதுடெல்லி, எரிசக்தி விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடல் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று பொதுத்துறை நிறுவனமான 'ஆயில் இந்தியா லிமிடெட்' (OIL)-இன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நெருக்கடிகளுக்கு மத்தியில். இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்துக்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதையே நம்பியிருக்கிறது. இதனால் நாட்டின் மதிப்புமிக்க அன்னியச் செலாவணி பெருமளவில் வெளியேறுகிறது. மேற்கு ஆசியப் போர்ச்சூழல் மற்றும் சர்வதேச சந்தை நெருக்கடிகளால் இந்தநிலை நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை பன்மடங்கு உயர்த்துகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் கடுமையான சரிவை ஏற்படுத்தி, உள்நாட்டில் பணவீக்கத்தையும் நிதிப் பற்றாக்குறையையும் தூண்டி பொதுமக்களின் வாங்கும் திறனைப் பாதிக்கிறது. உள்நாட்டில் உற்பத்தி இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கு தடையற்ற எரிசக்தி மிக அவசியமாகும். இதனால் சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. உள்நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை மீண்டும் தோண்டியெடுப்பதும் அல்லது புதிய எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்கவும் மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, நாட்டின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது" என்றார். பொருளாதார வளர்ச்சி - புதிய உச்சம் மேலும் அவர், "வெளிநாடு இறக்குமதி சுமையைக் குறைக்கும் வகையில், இந்தியாவின் தரைப்பகுதிகள் மட்டுமின்றி, ஆழ்கடல் பகுதிகளிலும் புதிய எண்ணெய் கிணறுகளைக் கண்டறியும் பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் போது, எரிசக்தித் துறையில் இந்தியா சுயசார்பு அடைவதோடு மட்டுமல்லாமல், நுகர்வோருக்கு தடையற்ற விலையில் எரிபொருட்கள் கிடைக்க வழிவகை ஏற்படும். இந்த உத்தி நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கனடா - அமெரிக்கா இடையே வர்த்தக தடை அமல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே, சுங்க வரி விதிப்பு தொடர்பாகக் கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் கனடாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த தடையை அமல்படுத்தி அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. இதனால் ரூ.9 ஆயிரத்து 600 கோடி (1 பில்லியன் டாலர்) மதிப்புள்ள மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா நேற்று முதல் அதிரடித் தடை விதித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/india-looks-to-boost-exploration-as-hormuz-crisis-threatens-supply




