தஞ்சாவூர் ஸ்வீட் கடை ஒன்றில். “அரைக்கிலோ ஸ்வீட் குடுங்க. கொஞ்சம் சுகர் கம்மியா.” “என்னது, ஸ்வீட்ல சுகர் கம்மியாவா. என்ன சார் சொல்றீங்க?” “அதாங்க. இந்த பாதுஷா மாதிரி லைட் ஸ்வீட்டா குடுங்கன்னு சொன்னேன்.” - தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர். சோழிங்கநல்லூர் டீக்கடை அருகே இருவர். “என்ன சார். ஞாயித்துக்கிழமை அன்னைக்கு சட்டசபை நிகழ்ச்சி பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இன்னைக்கு சட்டசபை உண்டா என்ன?” “இல்லை சார். இது போன வாரம் நடந்தது. ஹைலைட்ஸ் பார்த்துக்கிட்டு இருக்கேன்.” “ஓ அப்படியா. சரி சரி. நான் வெள்ளிக்கிழமை எபிசோட் வரைக்கும் பார்த்துட்டேன். திங்கட்கிழமைக்கு வெயிட்டிங்!” - டி.ஆர்.வி.ஸ்டாலின், சென்னை. திருவண்ணாமலை கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் இருவர். ``ஏண்டா மாப்ளை. நம்ம காலேஜ் சேர்மன், பதவியை ரிசைன் பண்ணிட்டு வேற தொழிலுக்குப் போறாராமே!’’ ``அட ஆமாடா. அவங்க அப்பாவுக்குக் கட்சியில வயசாயிடுச்சுன்னு திடீர்னு ரிட்டையர்மென்ட் அறிவிச்சிட்டாங்களாம்!’’ ``சரி, அதுக்கென்ன?’’ ``அதனால, அவங்க அப்பா வேலைக்கு நம்ம சேர்மனும், காலேஜ் சேர்மன் வேலைக்கு அவங்க அப்பாவும் வரப்போறாங்களாம்.’’ - வி.வெங்கடேசன், நாகப்பட்டினம். சென்னை டீக்கடை ஒன்றில் இரு நண்பர்கள். “மச்சி. சட்டமன்றத்துல முதல்வர் விஜய்யின் முக பாவங்களைப் பார்த்து ரசிக்க டிஜிட்டல் திரை வெக்கணும்னு த.வெ.க எம்.எல்.ஏ பேசியிருக்காருடா?” “நம்ம முதல்வர்தான் முகத்துல எந்த ரியாக்ஷனும் காட்ட மாட்டாரே மச்சி. அப்பறம் எதுக்கு டிஜிட்டல் திரை?” - ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம். டயலாக் அனுப்பவேண்டிய முகவரி: ஆசிரியர், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. dialogue@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/humour-and-satire/dialogue-20-september-02-2026




