சென்னை, கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை தலைநகர் பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் ஹெப்பால், ராஜாஜிநகர், மெஜஸ்டிக், ஒயிட்பீல்டு உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று பீன்யா-தாசரஹள்ளி பகுதியில் உள்ள பாரதி திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பார்வையாளர் ஒருவர் தலையில் பலத்த கயாம் அடைந்தார். இதேபோல், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காஞ்சல்லி, தசனதொட்டி உள்ளிட்ட கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எச்சரிக்கை இந்த நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரு. மைசூரு, தட்சிண கன்னடா, சிவமொக்கா, சிக்கமகளூரு, பெலகாவி உள்பட 17 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/heavy-rains-in-karnataka-yellow-alert-for-17-districts



