நியூயார்க் மோனா தீவு அருகே ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் கடலோர காவல் படையினர் போர்ட்டோ ரிக்கோ நகரின் மேற்கே அமைந்த மோனா தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 60 பேருடன் வந்த படகு ஒன்று விபத்தில் சிக்கியது. 40 பேர் மீட்பு இதில் படகில் இருந்த 2 பேர் பலியாகி உள்ளனர். 40 பேரை படையினர் உயிருடன் மீட்டனர். மற்றவர்கள் பற்றிய விவரம் தெரிய வரவில்லை. படகு கவிழ்ந்ததில், அதில் பயணித்தவர்கள் ஏறக்குறைய 12 மணிநேரம் வரை கடலில் தத்தளித்தபடி இருந்தனர். படகில் இருந்தவர்கள் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டதில் மற்றவர்கள் பயத்தில் கடலில் குதித்துள்ளனர். அப்போது அவர்கள் உயிர் காக்கும் கவசம் எதனையும் அணிந்திருக்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/boat-accident-near-mona-island-2-killed-40-rescued




