பீஜிங், சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் 2-வது ஹியூமனாய்டு ரோபோ போட்டியில், உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் சாதனையை ரோபோ ஒன்று முறியடித்துள்ளது. 100 மீட்டரில் புதிய சாதனை சீனாவின் பீஜிங் நகரில் 2-வது ஹியூமனாய்டு ரோபோ போட்டி சனிக்கிழமை தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 2,000 ஹியூமனாய்டு ரோபோக்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் தடகளம், டேபிள் டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், ஒரு ரோபோ வெறும் 9.39 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து அசத்தியது. 16 ஆண்டுகால சாதனை முறியடிப்பு ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார். இந்நிலையில், தற்போது 9.39 விநாடிகளில் 100 மீட்டரை கடந்த ரோபோ, போல்ட்டின் சாதனையை விட 0.19 விநாடிகள் வேகமாக பந்தயத்தை நிறைவு செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/othersports/moment-humanoid-robot-beats-usain-bolts-100m-record




