லீட்ஸ், இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட் சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 171 ரன்னில் ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து தொடக்க நாளில் 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று மழையால் மதிய உணவு இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் ஜோர்டான் காக்ஸ் 73 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 66 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பின்னர் நிலைத்து விளையாடிய ஹாரி புரூக் 91 ரன்கள், டேன் லாரன்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 2வது நாள் முடிவில் 82 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 366 ரன்கள் குவித்துள்ளது. 195 ரன்கள் முன்னிைல பெற்றுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-pakistan-england-team-in-the-lead




