ஷாங்காய், குடியிருப்பில் புகுந்த 3 மீட்டர் நீள ‘வெள்ளை நிற’ மலைப்பாம்பைத் தீயணைப்புப்படையினர் மீட்டனர். வெள்ளை நிற மலைப்பாம்பு சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், பார்ப்பதற்கே அச்சுறுத்தும் வகையில் 3 மீட்டர் நீளமுள்ள வெள்ளை நிற மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் ஏர் கண்டிஷனர் வெளிப்புற பகுதிக்கு அருகில் இந்த வெள்ள நிற பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட அப்பகுதி மக்கள், பயத்தில் அலறியடித்து ஓடினர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மலைப்பாம்பு மீட்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த வெள்ளை மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். அல்பினோ பர்மிய மலைப்பாம்பு மீட்கப்பட்ட அந்தப் பாம்பு சுமார் 15 கிலோ எடை கொண்ட பர்மிய மலைப்பாம்பு வகையாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அது பின்னர் வனவிலங்கு மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குடியிருப்பு பகுதியில் புகுந்த இந்த அதிசய வெள்ளை நிற மலைப்பாம்பை பிடிக்க வீரர்கள் போராடிய வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/3-metre-white-python-rescued-from-shanghai-apartment




