சென்னை, தனுஷ் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பாகவே இந்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ரசிகர் மன்றத்தில் தனுஷ் கவனம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில், தனது ரசிகர் நற்பணி மன்றத்தையும் வலுப்படுத்துவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மன்ற நிர்வாகிகளையும் தனுஷ் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதி வாரியாக மன்றங்கள் இந்த நிலையில், தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களை தொடங்கவும், புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்கவும் மன்ற நிர்வாகிகளுக்கு தனுஷ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர் மன்ற செயல்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதாக அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் இயக்கமாக மாற்ற திட்டமா? இதற்கிடையில், தனுஷ் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பாகவே இந்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், புதிய அரசியல் அமைப்புக்கு பெயர் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும், தனுஷ் தரப்பில் இதுவரை அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanush-in-the-political-arena-keen-on-strengthening-his-fan-club



