கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா - ஜப்பான் அணிகள் சர்வதேச டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன. வரும் செப்டம்பர் 22-ம் தேதி, ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஒற்றை டி20 போட்டி நடைபெறவிருக்கிறது. இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையில், ‘ஸ்போர்ட் 75’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அக்டோபரில் நாகோயாவில் தொடங்கவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக, இரு அணிகளுக்கும் இது முக்கியமான பயிற்சிப் போட்டியாகவும் அமையவிருக்கிறது. இந்தியா - ஜப்பான் மோதும் டி-20! ஜப்பானில். இந்திய நேரப்படி எப்போது? இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. ஜப்பான் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். மைதானத்துக்குச் செல்ல முடியாத இந்திய ரசிகர்கள், ‘FanCode’ ஆப் மற்றும் இணையதளம் வழியாக போட்டியை நேரலையில் பார்க்கலாம். இந்தப் போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 2,000 இருக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணி விளையாடுகிறது என்ற செய்தி வெளியானதும், டிக்கெட் விற்பனைக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியா - ஜப்பான் மோதும் டி-20! ஜப்பானை எதிர்கொள்ளப் போகும் இந்திய அணியில் பி.சி.சி.ஐ சீனியர் வீரர்கள் யாரையும் ஜப்பானுக்கு அனுப்பவில்லை. மாறாக, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியே ஜப்பானுக்கு எதிரான இந்தப் போட்டியிலும் களமிறங்கவுள்ளது. அதனால், இந்தியாவின் இளம் வீரர்களுக்கு இது ஜப்பான் மண்ணில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பாகவும் அமையவிருக்கிறது. `கடன் எதனால் வாங்கப்படுகிறது?' - பிரேமலதாவின் ஜப்பான் உதாரணம்! | Live முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://sports.vikatan.com/cricket/india-vs-japan-historic-t20-cricket-match-date-time-squad




