கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே. டெல்லி ஜந்தர் மந்தரின் போராட்ட வெற்றிக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பள்ளிகளுக்கு சென்று, அங்குள்ள கட்டமைப்புகளைப் பார்வையிட்டு வருகிறார். அவர் செல்லும் இடங்களில் கட்டமைப்பு மோசமாக இருந்தால், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று தொலைகாட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார். அதில் அவரிடம், 'இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார்?' என்கிற கேள்வி கேட்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின்Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை! "தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் ஒருவர். அவர் பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்திருந்தார். கேரளாவில் பினராயி விஜயன் கல்வி மற்றும் சுகாதார மாதிரியை மிக நன்றாக அமைத்தார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் பள்ளிகள் மற்றும் சுகாதாரத் துறையில் நன்றாக பணியாற்றி இருக்கிறார். நேர்மையாக சொல்ல வேண்டுமானால், இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/abhijit-deepke-names-stalin-among-india-best-chief-ministers



