ராஞ்சி ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.2.2 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் செயல்பட்டு வந்த, அரசால் தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருப்பவர் மிசிர் பெஸ்ரா (வயது 65). இவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.2.2 கோடி பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 141 வழக்குகள் இவர் மீது 141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து தேடப்பட்ட நபராக இருந்த அவரை, தன்பாத் மாவட்டத்தில் உள்ள மணியாடி பகுதியில் வைத்து போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவருடன் ரூ.15 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட ஒருவர் உள்பட 2 வேறு மாவோயிஸ்டுகளும் கைது செய்யப்பட்டு உள்ளனர். டி.ஜி.பி. சாகர் டா மற்றும் பாஸ்கர் டா என்ற பெயராலும் அறியப்படும் இவர், 1980-ம் ஆண்டு முதல் இந்த தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்து வருகிறார். இதனால், ஜார்கண்டில் நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று மாநில டி.ஜி.பி. தடாஷா மிஷ்ரா, ராஞ்சி நகரில் இன்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/jharkhand-rs-2-2-crore-rewarded-maoist-leader-arrested




