நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 675 காசுகளாக (ரூ.6.75) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 680 காசுகளாக (ரூ.6.80) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.7.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/egg-prices-rise-again




