ஆம்ஸ்டெல்வின், 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் (வாவ்ரே) மற்றும் நெதர்லாந்தில் (ஆம்ஸ்டெல்வின்) நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப் பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணி கள் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்றுக்கு வந்துள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'இ' பிரி வில் இந்தியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, நெதர்லாந்து, 'எப்' பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 2-வது சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழை யும். இரண்டாவது சுற்றை பொறுத்தமட்டில் ஒவ்வொரு அணியும் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாடும். ஏற்கனவே லீக் சுற்றில் சந்தித்த அணியுடன் மோதாது. இந்த நிலையில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 2-வது சுற்றில் முதலாவது ஆட்டத்தில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அணியான நெதர்லாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் பணிந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு மங்கியது. நெதர்லாந்து அணியில் டியூகோ டெல்கென்காம்ப் 41-வது நிமிடத்திலும், டிஜெப் ஹோடெ மெக்கர்ஸ் 51-வது நிமிடத்திலும், திஜ்ஸ் வான் டேம் 55-வது நிமிடத்திலும் கோலடித்தனர். இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மர்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பில் 52-வது நிமிடத் தில் பதில் கோல் திருப்பினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/hockey/hockey-world-cup-india-defeated-2




