சென்னை, மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின் நிறுவன தலைவருமான பேராசிரியர் பி. ராமசாமி சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னை அண்ணா நகரிலுள்ள இல்லத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வரவேற்பு மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், மலேசிய உரிமை கட்சியின் நிறுவன தலைவருமான பேராசிரியர் ராமசாமி தங்கள் இணையருடன், இன்று எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவரையும் என்னையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அவரை பட்டாடை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தேன். மதிய விருந்து அப்போது, மலேசிய நாட்டின் அரசியல், பொருளாதாரம் குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் குறித்தும் பல்வேறு கோணங்களில் உரையாடினோம். அதன்பிறகு, எங்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் பங்கேற்று சிறப்பித்தார்கள். இந்த சந்திப்பிலும் விருந்து உபசரிப்பிலும் மலேசிய உரிமை கட்சியின் துணை தலைவரும், மலேசிய தமிழர் குரல் அறக்கட்டளையின் தலைவருமான டேவிட் மார்ஷல், பினாங்கு மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மலேசிய உரிமை கட்சியின் பொது செயலாளருமான சதீஷ் முனியாண்டி, மலேசிய உரிமை கட்சியின் பொருளாளர் கிருஷ்ணசாமி மற்றும் மலேசிய உரிமை கட்சியின் அரசியல் ஆலோசகரும் மலேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சம்ஷேர் சிங் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவருமான பெருமரியாதைக்குரிய பேராசிரியர் இராமசாமி அவர்கள் தங்கள் இணையருடன், இன்று (14.09.2026) எங்களது அண்ணா நகர் இல்லத்திற்கு வருகை தந்து, தலைவர் அவர்களையும் என்னையும் மரியாதை நிமித்தமாகச்… — Durai Vaiko (@duraivaikooffl) September 14, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/malaysian-rights-party-chief-prof-ramasamy-chennai-visit-meets-vaiko




