திருவண்ணாமலை. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆண் யானை வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ருக்கு என்ற பெண் யானை இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிச னம் செய்ய செல்வதற்கு முன்பு யானை ருக்குவிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். மேலும் கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் பல்வேறு வாக னங்களில் வீதியுலா செல்லும் போது உற்சவங்களுக்கு முன்பு யானை ருக்கு கம்பீரமாக மாட வீதிகளில் வலம் வருவதும் வழக்கம். மகா தீப விழாவின் போது தீப கொப்பரையை யானை ருக்கு ஆசீர்வதித்த பிறகு தான் 2,668 அடி மலை உச்சிக்கு தூக்கி சென்று மகா தீபம் ஏற்றுவார்கள். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி கோவில் வளாகத்தில் யானை ருக்கு இறந்தது. பின்னர் கோவில் அருகிலேயே ருக்குவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 7 வயதில் அருணாச லேஸ்வரர் கோவிலுக்கு வந்த யானை ருக்கு சுமார் 23 ஆண்டுகள் ஆன்மிக பணியை சிறப்பாக செய்தது. தனது 30-வது வயதில் ருக்கு மரணம் அடைந்தது. ஆண் யானை வருகை ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சிவத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மீண்டும் யானை கொண்டு வர வேண்டும் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். யானை ருக்கு இறந்து சுமார் 8 ஆண்டுகள் கடந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி யளவில் ஆண் குட்டி யானை கொண்டு வரப்பட்டது. அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் ஏற்றி கொண்டு யானை நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலை வந்தடைந்தது. 8 வயதுடைய இதன் பெயர் ஹீராலால் ஆகும். இந்த யானை 6 அடி உயரம் கொண்டது. சிறப்பு பூஜை கோவிலுக்கு வந்த யானைக்கு கோவில் நிர்வாகத்தின் மூலம் ராஜகோபுரம் எதிரில் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் சிவாச்சாரி யார்கள் மூலம் தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து மலர் தூவி வரவேற்ற னர். இதில் த.வெ.க. நிர்வாகிகள் சீதா சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் பழனி, இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய யானை வருகையால் பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய யானையை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ராஜகோபுரத்தில் இருந்து திருமஞ்சன கோபுரம் வழியாக கோவிலுக்குள் யானை லாரியில் அழைத்து செல்லப்பட்டது. தமிழ்நாடு வனத்துறையின் உரிய தடையின்மைச் சான்று மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப் பட்ட பின்னரே இந்த யானை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடர்ந்து 10 நாட்கள் என 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த யானை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மாட வீதிகளில் வலம் வருமா அல்லது உரிய பயிற்சி பின்னர் மாட வீதிகளில் வலம் வருமா என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/8-year-old-male-elephant-newly-brought-to-tiruvannamalai-temple




