சென்னை, தமிழ் மாதமான ஆடியின் 18-வது நாள் ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்தாலும், சுப காரிய பேச்சுக்களை தொடங்கவும், புதிய முயற்சிகளை தொடங்கவும் ஏற்ற நாளாக ஆடிப்பெருக்கு கருதப்படுகிறது. எனவே ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அவ்வாறு பயணம் செய்யும் மக்களின் வசதிக்காக, ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதன்படி வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 3 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு பேருந்துகளில், கிளாம்பாக்கத்தில் இருந்து 1,020 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 295 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போல், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப ஞாயிற்றுக் கிழமையன்று 420 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம், பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-buses-are-being-operated-to-various-parts-of-tamil-nadu-for-aadi-perukku




