வாஷிங்டன், 4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சான் பிரான்சிஸ்கோ - லாஸ் ஏஞ்சல்ஸ் மோதல் இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் குவாலிபையர் 1 சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். இப்போட்டியில் தோல்வியடையும் அணி குவாலிபையர் 2 சுற்றுக்கு செல்லும். இதனால், நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற்றும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/san-francisco-unicorns-vs-los-angeles-knight-riders-qualifier-in-major-league-cricket




