கன்னியாகுமரி, கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40 வயது), தொழிலாளி. இவருடைய மனைவி அனிஷா (35 வயது). இவர்களுக்கு ஆஸ்னா என்ற மகள் உள்ளார். ஆஸ்னாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சம்பவத்தன்று மகளின் சிகிச்சைக்காக குமார் தனது பைக்கில் மனைவி மற்றும் மகளை அழைத்துக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் தமிழக-கேரள எல்லை பகுதியான பாறசாலை அருகே நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் மர்ம ஆசாமி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த ஆசாமி, குமாரின் பைக்கின் அருகில் வந்து திடீரென அனிஷா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன். திருடன் என கூச்சலிட்டார். மேலும், மர்ம ஆசாமி நகையை பறித்ததில் அனிஷா நிலைத் டுமாறியதால் பைக்குடன் அவர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட் டது. இதற்கிடையே அந்த மர்ம ஆசாமி பைக்கில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், இதுகுறித்து குமார் பாறைசாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-riding-bike-with-husband-robbed-of-7-pounds-of-jewelry




