சென்னை, மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ‘காலை உணவு’ பொங்கல் ஓட்டலுக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். சிற்றுண்டிகள் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளியில், ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டத்தின்’ கீழ், இங்கு தினமும் சுடச்சுட சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலை உணவு பள்ளி தொடங்குவதற்கு முன்பு காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. பொங்கல், கிச்சடி, உப்புமா போன்ற சத்துள்ள உணவு வகைகள் இதில் இடம் பெற்றுள்ளன. தொடக்க பள்ளிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் சிலர் முறை கேடு செய்வது தெரியவந்து உள்ளது. 250 மாணவர்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 250 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 150 குழந்தைகள் காலை உணவு திட்டத்திற்கு தகுதியானவர்கள். ஆனால் 60 பேர் மட்டுமே காலை உணவு சாப்பிடுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சுடச்சுட சுவையான பொங்கல் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கொண்டுவரப்பட்டது. 4 குழந்தைகள் 8.30 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 4 குழந்தைகள் மட்டுமே பொங்கல் வாங்கி சாப்பிட்டார்கள். வேறு யாரும் சாப்பிடவில்லை. 9 மணிக்கு வகுப்பு தொடங்கியது. 9.05 மணிக்கு மீதமுள்ள மொத்த பொங்கலையும் ஒரு கூடையில் வைத்து ஒரு பெண் வெளியே கொண்டு சென்றார். உணவு விற்பனை ஓட்டலில் உணவு விற்பனை மூலம் கிடைக்கும் தொகையைப் பள்ளியில் உள்ள சிலர் பங்கிட்டு கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளி பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய காலை உணவை ஒவ்வொரு நாளும் ஓட்டலில் விற்று முறைகேடு செய்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது. தலைமை ஆசிரியர் பள்ளி குழந்தைகளின் பசி தீர்க்க வேண்டிய உணவு, ஓட்டல்களில் விற்கப்பட்டு வியாபாரமாகி கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் தினமும் பார்த்து வேதனை அடைந்தனர். ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு பள்ளியிலிருந்து காலை உணவை அந்த பெண் ஓட்டலுக்கு கொண்டு செல்வதை கண்காணித்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியாமல் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு பள்ளியின் தலைமையாசிரியர் கொடுக்கும் மாணவர்கள் பட்டியல் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டாலும் அது முறையாக குழந்தைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-meal-for-municipal-school-children-sold-to-hotel




