தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்த நாளை முன்னிட்டு, ‘எல்லம்மா’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், ஆறு, சிங்கம், புலி, வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம். இயக்குநர் வேணு எலிடாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ படத்தில் கதாநாயனாக தேவி ஸ்ரீ பிரசாத் அறிமுகமாகிறார். இப்படத்தை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பலகாம்’ என்ற படத்தை இயக்கிய வேணு எல்டண்டாடி இயக்குகிறார். ‘எல்லம்மா’ திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரிக்கின்றனர். இதில் பார்சி என்ற கதாபாத்திரத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகிறது. இதில் சாய் பல்லவி, மிருணாள் தாக்குர் அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரில் ஒருவர் கதாநாயகியாக நடிப்பார்கள் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் பிறந்த நாளை முன்னிட்டு, ‘எல்லம்மா’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/devi-sri-prasads-birthday-yellamma-film-crew-released-a-special-poster-and-extended-their-wishes




