ராமேசுவரம், ராமேசுவரம் அருகே அரசின் அனுமதி இல்லாமல் 100-க்கும் மேற்பட்ட பனைகள் வெட்டி சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புறவழிச்சாலை ராமேசுவரம் நகர் பகுதியில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற் பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ராமேசுவரத்தில் புறவழிச்சாலை அமைப்ப தற்காக நகரின் வெளிப்புற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பேய்க்கரும்பு பகுதி யில் இருந்து ராமர் பாதம், ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு, சுடுகாட்டம்பட்டி வழியாக அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் முடிவடையும் வகையில் புறவழிச்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நகரின் வெளிப்பகுதியில் புறவழிச்சாலை அமைய உள்ள நிலையில் அரியாங்குண்டு உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் நிலத்தின் மதிப்பு உயர தொடங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்வதற்காக முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது. பனைகள் வெட்டிச்சாய்ப்பு இதற்காக அரியான்குண்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் வளர்ந்து நின்ற 100-க்கும் மேற்பட்ட பனைகளை அரசின் அனுமதி இல்லாமல் வெட்டி சாய்த்துள்ளனர். நிலத்தடி நீரை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் கடல் அரிப்பை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பனைகளை அரசு அனுமதி இல்லாமல் வெட்டியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tension-near-rameswaram-more-than-100-palm-trees-cut-down




