‘பிரேமலு’ படத்தின் பிரபலங்கள் மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மமிதா பைஜு ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த ‘டியூட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜய்யின் ‘ஜன நாயகன்’, சூர்யாவின்‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படங்களில் நடித்துள்ளார். நிவின் பாலியுடன் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சங்கீத் பிரதாப் ‘பிரேமலு’ படத்தில் அமல் டேவிஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சங்கீத் பிரதாப். இவர், மோகன் லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’, நிவின் பாலியுடன் ‘பேபி கேர்ள்’ மற்றும் நலனுடன் “மோலிவுட் டைம்ஸ்’ போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்று வருகிறார். புதிய படத்தின் டைட்டில் இந்த நிலையில், மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் இணைந்து நடித்துள்ள புதிய படத்துக்கு ‘ஹலோ டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்த் இசையில், அறிமுக இயக்குநர் டினோய் பாலோஸ் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/mamita-baijus-new-film-first-look-poster-out




