கோவை, கோவையை அடுத்த அரிசிபாளையம் மூலக்கடை வீதியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி.கம்பெனி அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அவர் அருகில் சென்று பார்த்தார். அங்கு ஒரு ஆண் குழந்தை கிடந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர், கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டனர். இதில் அது பிறந்த ஒருமணி நேரமே ஆன குழந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அரிசிபாளையம் மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீபா நேரில் சென்று குழந்தைக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குழந்தையை ரோட்டில் வீசி சென்றது யார்? என்று தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-baby-boy-found-abandoned-on-the-road-rescued-alive




