திமுக-வில் தலைமைக் கழகப் பேச்சாளராகவும் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருக்கும் நடிகர் நவீந்தர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாதஸ்வரம், அழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் நவீந்தர். தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். அடிப்படையில் இவரது குடும்பத்தினர் திமுக அனுதாபிகள். இவரும் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் பயணித்து வந்தார். மேலும் கடந்த காலங்களில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். இந்த நிலையில், இன்று தன் மனதில் எழுந்த சில மாற்றங்களைத் தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அத்தனை பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார். திமுக நவீந்தரிடம் பேசியபோது, ``அம்பேத்கர், காமராசர், பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து புது இயக்கத்தைத் தொடங்கலாம்னு இருக்கேன். படிக்கிற போது மாணவர் பேரவைத் தேர்தல், சின்னத்திரை சங்கம்னு தேர்தல் அனுபவங்கள் ஏற்கெனவே கொஞ்சம் இருக்கு. என் சொந்த ஊர் செங்கல்பட்டு. அதனால் இப்ப திமுக-விலிருந்து கனத்த இதயத்தோடு வெளியேறுகிற அதேநேரம். என் பகுதி மக்களுக்குச் சேவை செய்யறதுங்கிற அடுத்த கட்ட நகர்வையும் முன்னெடுக்கலாம்னு இருக்கேன். அதனால் விரைவில் நடக்கவிருக்கிற மதுராந்தகம் இடைத்தேர்தல்ல சுயேச்சை வேட்பாளரா போட்டியிடறதுனு முடிவு செய்திருக்கேன். புதிய அமைப்பு குறித்து சீக்கிரமே அறிவிக்கறேன்'' என்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://cinema.vikatan.com/television/news-about-serial-actor-naveendhar-quit-from-dmk




