மதுரை, விஜய் முதல்-அமைச்சர் ஆனதால் கணவர் மற்றும் மகனுக்கு மொட்டை அடித்து, தனது வேண்டுதலை நிறைவேற்றியதாகப் பெண் ரசிகை ஒருவர் தெரிவித்தார். தாய்மாமன் தங்க மோதிரம் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையில் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று மதுரையில் முறைப்படி தொடங்கி வைத்தார். பெண் ரசிகை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற தவெக பெண் ரசிகை ஒருவர், அளித்த நெகிழ்ச்சியான பேட்டி தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகை செய்தியாளர்களிடம் அந்தப் பெண்மணி பேசியதாவது:- 8 வயது கனவு எனக்கு 8 வயதிலிருந்தே தலைவர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய வாழ்நாள் கனவு. அவர் தற்போது தமிழகத்தின் முத-அமைச்சராக அரியணை ஏறியுள்ளார். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாகவும், எனது நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றவும் எனது கணவருக்கும், எனது மகனுக்கும் முழுமையாக மொட்டை அடித்து எனது நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மதுரையை தேர்வு செய்தது ஏன்? மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 'தாய்மாமன்' என்ற உன்னதமான உறவுக்கு பெயர் போன மண் நம் மதுரை மண். அதனால்தான், இந்த வரலாற்று சிறப்புமிக்க 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முத-அமைச்சர் விஜய் மதுரையில் தொடங்கி வைத்துள்ளார். இது மதுரை மக்களுக்கு கிடைத்த பெருமை" என்று பெருமிதம் கொண்டார். மக்கள் அவசரப்பட கூடாது புதிய அரசுக்கு பொதுமக்கள் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், "முதல்-அமைச்சர் விஜய் மக்கள் முன் வைத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் ஆட்சி பொறுப்பிற்கு வந்து இப்போதுதான் சில நாட்களே ஆகிறது. எடுத்தவுடனேயே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று மக்கள் அவசரப்பட கூடாது; பொறுமை காக்க வேண்டும்" என்றும் அவர் மிக உருக்கமாக கேட்டுக்கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-shaves-husband-son-heads-to-fulfill-vijay-cm-vow




