சென்னை, ரூ.100 கோடி கொடுத்தாலும் மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரமாட்டேன் என ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார். கட்டா குஸ்தி 2 மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தனுஷுடன் நடித்த ஜகமே தந்திரம், விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப பெற்றார். தற்போது கட்டா குஸ்தி 2 திரைப்படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மன அமைதி இந்த நிலையில், கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் விலகிய ஐஸ்வர்யா லட்சுமி, அந்த முடிவு தனக்கு மிகுந்த மன அமைதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளை பதிவிட்டது என்னை மிகவும் மனவேதனைக்குள்ளாக்கியது. ஒரு கட்டத்தில் இந்த உலகமே எனக்கு எதிராக இருப்பது போலவும், அனைவரும் என்னை வெறுப்பது போலவும் உணர்ந்தேன்" என்றார். ரூ. 100 கோடி மேலும், தனது முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்த அவர், "யாராவது எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும், சமூக வலைதளங்களின் பக்கம் நான் திரும்ப மாட்டேன். இப்போது ஆன்லைனில் பழகுவதை விட மக்களை நேரில் சந்தித்து பேசுவதையே அதிகம் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/aishwarya-lekshmi-i-wont-return-to-social-media-even-for-rs-100-crore




