கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். வாய்த்தகராறு கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணிசாமி (வயது 28). இவருக்கும் சிறுவங்கூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(33) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி டீக்கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாலகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அந்தோணிசாமியைத் தாக்கியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், நேற்று அதிகாலை தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தோணிசாமியின் வீட்டிற்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளார். இதில் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/kallakurichi-petrol-bomb-thrown-at-workers-house-4-arrested




