கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய மாணவிகள் அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் 2 மாணவிகள் மது அருந்துகிறார்கள். பள்ளியின் வகுப்பறை முன்பு மேஜை போடப்பட்டிருக்கிறது. அதில் சாப்பாடு மற்றும் மது குடிப்பதற்கான தின்பண்டங்கள் இருக்கிறது. பாட்டிலில் உள்ள மதுவை மாற்றி, மாற்றி இருவரும் குடிக்கிறார்கள். அதனை மற்றொரு மாணவி வீடியோவாக படம் பிடிக்கிறார். அப்போது, மதுகுடிப்பதை ஏன் படம் பிடிக்கிறாய் என்று மாணவி ஒருவர் கேட்பது போல் வீடியோ இருக்கிறது. கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை இதுகுறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தக்கலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியையை நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் மது குடித்த மாணவிகளுக்கு மதுபாட்டில் கிடைத்தது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/schoolgirls-drink-alcohol-in-uniform-video-viral-action-against-headmistress



