சென்னை, நோயுற்றவர்களுக்கு தரமான சிகிச்சைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் அருண்ராஜ் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இளைஞருக்கு அங்கிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் குளுக்கோஸ் பாட்டிலில் கழிவறை தண்ணீரைப் பிடித்து வந்து கலக்க முயன்றதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கக் கூடிய, அவ்வளவு பெரிய அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்க ஒரு செவிலியர் கூடவா பணியில் இல்லை? மாற்றம் தருவோம் என்று கூறிக்கொள்ளும் தவெக அரசில் மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லாதோர் சிகிச்சை அளிப்பதுதான் மாற்றமா? இது போன்ற சம்பவங்கள் இன்று நேற்று நடப்பதல்ல. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் அல்லது மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்லாதோர் அலட்சியமாக சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது கிசிச்சை பெற வருவோருக்கும், தங்கி சிகிச்சை பெறுவோரின் உயிருக்கும், உடல் நலத்திற்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்துகிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் சிகிச்சை பெறுவோரின் உரிமைகளையும், உயிரையும் பாதுகாக்கும் வகையில் மருத்துவர் மற்றும் செவிலியர்களைக் கொண்டே நோயுற்றவர்களுக்கு தரமான சிகிச்சைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் அருண்ராஜ் கடும் நடவடிக்கைகளை எடுத்து அரசு மருத்துவமனைகள் தரத்தினைக் காத்திட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-hospital-or-negligent-hospital-vanathi-srinivasan-asks




