சென்னை, விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பலவிதமான வடிவமைப்புகளுடன் விநாயகர் சிலைகள் தமிழகத்திற்கு வரத்தொடங்கியுள்ளன. இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதை போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகின்றன. சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் செய்த சைகை வைரல் ஆனது. விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடி வமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இது உண்மையான சிலையா அல்லது ஏ.ஐ. தொழில்நுட்ப படமா என்பது உறுதியாகவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-style-vinayagar-idol



