புதுடெல்லி, தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான 152 இடங்களை அகில இந்திய இட ஒதுக்கீடுக்கு ஒப்படைக்க தடைகோரும் மனுவையும், காலியாக உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க கோரியும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி சி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஆலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, தமிழ்நாடு மாநிலத்தால் ஒப்படைக்கப்பட்ட 152 இடங்களில் சுமார் 40 இடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நிரப்பப்படாத 40 இடங்களை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், மீண்டும் ஒரு கலந்தாய்வு நடத்தி அந்த இடங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/40-unfilled-medical-seats-will-be-handed-over-to-tamil-nadu-central-government-assures-supreme-court




