தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்கம் மோதிரம் திட்டத்தை இன்று மதியம் தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். தொடர்ந்து மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவு எடுத்துக்கொண்டு, பின்னர் மாலை 4 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டார். அப்போது அழகர் கோவில் சாலை, அவுட் போஸ்ட் கோரிப்பாளையம், நெல்பேட்டை,கீழவெளி வீதி விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, ஜடாமுனி கோவில் தெரு, மீனாட்சி அம்மன் கோவில் வீதி, கிழக்கு சித்திரை வீதி முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர்கள் காத்திருந்து முதலமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். திறந்த வெளி வாகனத்தில் பட்டு வேட்டி அணிந்த முதலமைச்சர், பொதுமக்களின் வரவேற்பை ஏற்றவாறு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது கோவில் முன்பாக கூடியிருந்த பொதுமக்களை பார்த்து சட்டப்பேரவையில் செய்தது போன்ற செய்கையை செய்து காட்டினார். பின்னர் கிழக்கு சித்திரை வீதி பகுதி முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், அவர்கள் நிற்கும் இடத்திற்கே சென்ற முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து கையை காண்பித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரை பார்த்தபோது ஆரவாரத்துடன் பொதுமக்கள் வரவேற்றனர். முதலமைச்சர் விஜய் வாழ்க என்ற வாழ்த்து முழக்கத்துடன் ‘டிவிகே டிவிகே’ என்ற முழக்கத்தோடு வரவேற்றனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, அறங்காவல் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் அறங்காவல் குழு உறுப்பினர்கள் வரவேற்றனர். அப்போது அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜனின் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்தினார் முதல்வர் விஜய் இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ்,நிர்மல் குமார், ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் வினய், மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவக்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு பட்டு வஸ்திரம் வழங்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அம்மன் சன்னதி மற்றும் சுவாமி சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் அறங்காவல் குழு சார்பில் முதலமைச்சரிடம் பட்டு வேட்டி, பட்டு சேலை மற்றும் மீனாட்சி அம்மன் சிலை ஆகியவை வழங்கப்பட்டது. அதையடுத்து அன்னதானக் கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட முதலமைச்சர், கும்பாபிஷேகம் நடைபெற்றது குறித்தும் கேட்டறிந்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/chief-minister-vijay-had-dharshan-at-madurai-meenakshi-amman-temple




