நாமக்கல், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. 5-க்கும் மேற்பட்ட தொழிலாளிர்கள் இந்த பணியை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு குடோனில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில், அவை வைக்கப்பட்டிருந்த குடோன் மற்றும் அறை முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 4 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பட்டாசு குடோனின் உரிமையாளரான ராஜா மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/fire-at-firecracker-warehouse-near-namakkal-4-dead




