ஐதராபாத், தெலுங்கானாவில் ரீல்ஸ் எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்து ஒரு சிறுவன் உட்பட 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரீல்ஸ் மோகம் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் முப்பால் பகுதியில் உள்ள ஸ்ரீராம் சாகர் அணை கால்வாயில் குளிப்பதற்காக நிஜாமாபாத் ஆட்டோ நகரைச் சேர்ந்த ஷேக் கலீம் (வயது 24), நஜாவத் (வயது 24), மகாராஷ்டிர மாநிலம் ஹிமாயத் நகரைச் சேர்ந்த பர்ஹான் (வயது 17), மற்றும் மகாராஷ்டிர மாநிலம் போகாரோவைச் சேர்ந்த அகீம் (வயது 17) ஆகியோர் சென்றனர். அவர்கள் அந்த அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் அருகே குளித்தவாறு செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது கால் வழுக்கி 4 பேரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தீவிர தேடுதல் வேட்டை தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாயமான சிறுவன் அகீமை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் அணை கால்வாயில் ரீல்ஸ் எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/telangana-three-die-after-accidentally-falling-into-a-canal-while-trying-to-make-reels




