கோவை, கோவில் உண்டியலை திருடிய 4 ஊழியர்கள் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது ஒரு உண்டியலை அங்குள்ள ஊழியர்கள் திருடியுள்ளனர். பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 பேர் சஸ்பெண்ட் இந்த நிலையில் கோனியம்மன் கோவிலில் வேலை செய்து வந்த ஊழியர்கள் பாலசுப்ரமணியன், சரவணன், பிரதீப் குமார், கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரும் அதை கண்டுபிடிக்காமல் உடந்தையாக இருந்த அதிகாரிகள் ராம்குமார், உதயகுமார், குமார், உஷா நந்தினி என இவர்கள் 4 பேரையும் சேர்த்து மொத்தமாக 8 பேரை அமைச்சர் ரமேஷ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/8-employees-and-officials-of-coimbatore-koniamman-temple-suspended-minister-ramesh-orders




