திருவண்ணாமலை, திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தை சேர்ந்த திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் விதமாக எரிவாயு நுகர்வோர் குறை தீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. மனு இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தை சேர்ந்த நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம். மேற்படி கூட்டத்தில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் கலந்து கொள்வார்கள். இந்த தகவலை திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வம் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/lpg-consumer-grievance-redressal-meeting-in-tiruvannamalai-on-the-24th




