இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்) * திருச்செந்தூர் முருகப்பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா. * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு. * சமநோக்கு நாள். 2-ந் தேதி (புதன்) * தேய்பிறை சஷ்டி விரதம். * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம். * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். * கீழ்நோக்கு நாள். 3-ந் தேதி (வியாழன்) * கார்த்திகை விரதம். * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு. * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. * ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம். * கீழ்நோக்கு நாள். 4-ந் தேதி (வெள்ளி) * கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் * மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி விழா தொடக்கம். * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லித் தாயார் பவனி. * மேல்நோக்கு நாள். 5-ந் தேதி (சனி) * மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம். * தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், பிள்ளையார்பட்டி, உப்பூர் தலங்களில் விநாயகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். * சமநோக்கு நாள். 6-ந் தேதி (ஞாயிறு) * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலையில் வெள்ளி கேடய சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி. * மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதாரம். * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் உற்சவம் ஆரம்பம். * மேல்நோக்கு நாள். 7-ந் தேதி (திங்கள்) * முகூர்த்த நாள். * சர்வ ஏகாதசி. * உப்பூர் விநாயகப் பெருமான் சிம்ம வாகனத்தில் பவனி. * மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. * சமநோக்கு நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/devotional/aanmigam-this-weeks-special-events-1-september-2026-to-7-september-2026




