சென்னை, தனியார் பேருந்துகளிலும் வெற்றிப் பயண திட்டத்தினை செயல்படுத்தக் கோரி நாளை ஒரு நாள் வேலை நிறுத்ததில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான திட்டம் கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனை எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண பேருந்துகள் உள்ளிட்டவற்றில் விரிவுபடுத்தும் வகையில் வெற்றி பயணம் என்ற பெயரில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவு செய்துள்ளது. இது 7 அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சரிபார்ப்பு மற்றும் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. தனியார் பேருந்துகளிலும் இலவசம் வெற்றி பயணம் திட்டமானது தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பெரிதும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏனெனில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்பதால், பெண்கள் பெரும்பாலும் தனியார் பேருந்துகளை பயன்படுத்துவதில்லை. இதனால் தனியார் பேருந்துகளை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தனியார் பேருந்துகளிலும் வெற்றிப் பயண திட்டத்தினை செயல்படுத்தக் கோரி நாளை நள்ளிரவு முதல் 30ம் தேதி நள்ளிரவு வரை தனியார் பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தனியார் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும், அதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என அதன் தலைவர் தங்கராஜ் கூறியுள்ளார். வேலை நிறுத்தம் இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலவச மகளிர் பயண திட்டத்தால் எங்களுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் நாளை 29.09.2026 நள்ளிரவு 12.00 மணி முதல் 30.09.2026 நள்ளிரவு 12.00 மணி வரை 24 மணி நேரம் நமது பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்தம் செய்வது என்று நமது சம்மேளனதில் முடிவு செய்ய பட்டுள்ளது. ஆகையால் தமிழ்நாடு முழுவதும் எங்களது தனியார் பேருந்துகள் ஒரு நாள் மட்டும் இயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/private-buses-announce-one-day-strike-tomorrow




