சென்னை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- “தமிழக அரசு, வணிகர்களுக்கு வழங்கப்படும் மண்டி உரிம காலத்தை 5 ஆண் டுகளுக்கு நீட்டித்து மசோதா நிறைவேற்றியுள்ளதை தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு வரவேற்கின்றது. அதேபோல், அனைத்து தொழில், வணிக உரிமங்களும் ஒற்றைச் சாளர முறையில் வணிகர்களுக்கு அளித்து, வணிகம் செய்வதை எளிமைப்படுத்திடவும், வணிக உரிமங்களை ஆயுள் உரிமமாக மாற்றி அரசாணை வெளியிட்டு வணிகர்கள் எளிமையான முறையில் சிரமமின்றி வணிகம்செய்திட வழிவகை செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-market-yard-license-period-to-5-years-federation-of-traders-associations-thanks-tamil-nadu-government




