ஈரோடு, மதுபோதையில் அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்த வாலிபரை சரமாரியாக தாக்கிய பேருந்து ஊழியர்கள். மதுபோதையில் தகராறு ஈரோடு மாவட்டம் மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கார்மெண்ட்ஸ் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பேருந்து திடீரென மொடச்சூர் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சற்று தள்ளி சென்று நின்றது. இதனால் கார்த்திகேயன் ஓட்டுநர் முறையாக நிறுத்தவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தார். இதனால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அதிர்ச்சியடைந்தனர். அவரை சரமாரியாக தாக்கினர். கைது இது குறித்து கோபிசெட்டிப்பாளையம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து பேருந்து ஊழியர் மற்றும் பொதுமக்கள் கார்த்திகேயனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், பொது சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/employees-brutally-assaulted-a-youth-who-broke-the-window-of-a-government-bus




