காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், கடந்த 18-ந்தேதி, வலுக்கட்டாயமாக டெல்லி போலீசாரால் மத்திய அரசின் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், மேதாந்தா என்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியில் துன்புறுத்தல் மேதாந்தா ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டபோது, சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் தான் துன்புறுத்தப்பட்டதாக ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் சோனம் வாங்சுக் வெளியிட்டார். அதில், “என்னை போக விடுங்கள் அல்லது கைது செய்யுங்கள்” என்று ஒரு பாதுகாப்பு படை வீரரை நோக்கி சோனம் வாங்சுக் பேசும் வீடியோ இடம்பெற்றுள்ளது. ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுப்பு ஆனால், இந்த குற்றச்சாட்டை சப்தர்ஜங் ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. கோர்ட்டு உத்தரவு ஆஸ்பத்திரி நிரவாகத்தின் கையில் கிடைப்பதற்கு முன்பே சோனம் வாங்சுக்கின் உதவியாளர்கள் அந்த வீடியோவை எடுத்ததாக சப்தர்ஜங் ஆஸ்பத்திரி தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/sonam-wangchuk-alleges-mistreatment-at-the-hospital-what-happened




