நேபாள-திபெத் எல்லை பகுதியில் நீர் பிரமாண்டமாக சீறிப்பாய்ந்து சென்ற காட்சி வெளியாகியுள்ளது. இமயமலையின் உயரமான பகுதியில் பனிப்பாறை சரிவாக தொடங்கிய இந்த நிகழ்வு, பேரழிவை ஏற்படுத்த கூடிய திடீர் வெள்ளமாக மிக விரைவாக மாறியது. நகரங்களுக்குள் ஊடுருவிச் சென்றதுடன், பாலங்களை சேதப்படுத்தி, வழியில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது. உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கானோரை இன்னும் காணவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட காணொளிகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தி, இந்த திடீர் வெள்ளத்தின் பாதையை 'பிபிசி வெரிஃபை' ஆய்வு செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c14dl247eygo




