சென்னை, மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- பூலித்தேவர் பிறந்த தினம் நெற்கட்டும்செவலைத் தலைமையிடமாகக் கொண்டு திறம்பட ஆட்சி செய்த மாமன்னரும், அந்நியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முதன்மையானவருமான மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஆங்கிலேயர்களின் படைபலத்தைக் கண்டு துளியளவும் பின்வாங்காமல், தாய்மண்ணைக் காக்கத் தொடர்ந்து முன்னேறிச் சென்று, பல வெற்றிகளைக் கண்டு, வீரத்தையும் விடுதலை உணர்வையும் மக்கள் மத்தியில் விதைத்த மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/great-king-puli-thevars-birth-anniversary-ttv-dhinakaran-pays-tribute




