கோவை, ஐதராபாத்தில் இருந்து நேற்று இரவு பேருந்தில் கிளம்பி வந்த தொழிலதிபர் தாமுன் என்பவர், கோவை லட்சுமி மில்ஸ் அருகே இன்று காலை இறங்கியுள்ளார். அவர் தொழில் தொடர்பாக சூட்கேசில் சுமார் ரூ.1 கோடி பணத்தை கொண்டு வந்துள்ளார். கோவை வந்தடைந்ததும் பேருந்தை விட்டு இறங்கிய அவர், அடுத்த வாகனத்திற்காக சாலையோரம் காத்திருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், அவரிடம் இருந்த சூட்கேசை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இது தொடர்பாக கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் தாமுன் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஒரு நபர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து மற்ற நபர்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியில் தொழிலுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-mysterious-gang-robs-businessman-of-1-crore-police-conducting-intensive-investigation




