சூர்யாவுக்கு 'கருப்பு', 'விஸ்வநாத் & சன்ஸ்' என இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன. அத்தோடு தீபாவளி வெளியீடாக மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'சீன்' படமும் வருகிறது. சூர்யா நேற்று சென்னையில் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சூர்யா பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தக் காணொளியில் அவர், "அன்பை மட்டுமே விதைப்போம். ஒரு சோஷியல் மீடியாவில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டான் என்பதற்காக நாம் பதிலளிக்கும்போதுதான் நாம் காயப்படுவோம். நாம் நம்மளாகவே இருப்போம், அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். அவர்களுக்குப் புரிய வைப்பதும், அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்வதும் கொஞ்சம் கஷ்டம். சில பேருக்குப் புரியும், ஆனால் பல பேருக்கு அது புரியாது. அதனால் நீண்ட நேரம் பேசி உங்களுடைய எனர்ஜியை அதில் வேஸ்ட் பண்ணிக்கொள்ள வேண்டாம். சூர்யா உங்களுக்குப் பிடித்ததைத் தினம் தினம் செய்யுங்கள். இந்த உலகம் வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்குப் பிடித்ததைத் நேர்மையாக செய்தால், நிச்சயமாக அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள முடியும். சுற்றி இருப்பவர்களுக்குத் திரும்பத் திரும்ப நான் அன்பை மட்டுமே கொடுக்க விரும்புகிறேன்." எனப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/kollywood/suriya-speech-fan-club-meeting-social-media-trolls




