ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் மின்னல் தாக்கியதில் 10 ஆடுகள் பலியாகின. இடி-மின்னலுடன் பலத்த மழை ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராஜ்குமார் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி 10 ஆடுகள் பலி இதில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை மின்னல் தாக்கியது. இதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. ராஜ்குமார் லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-10-goats-killed-by-lightning




