சேலம், ஓமலூர் அருகே செக்காரப்பட்டி தொப்பூர் கேன்டீன் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், முன் னாள் ராணுவ வீரர். இவர் தனது மகன் நந்தகுமார் (வயது 32) மற்றும் குடும்பத்துடன் கடந்த 17-ந் தேதி திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் செல்வராஜின் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம், வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். 8 பவுன் நகை திருட்டு இந்தநிலையில், நேற்று காலை செல்வராஜ் வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம். 2 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. போலீசார் வலைவீச்சு மோப்பநாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வீட்டில் தடயங்களை சேகரித்து விட்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/8-sovereigns-of-gold-stolen-from-ex-servicemans-house-near-salem




